சத்தம் போடாமல் சாம்சங் பார்க்கும் வேலைகள்; அடுத்தடுத்த சர்பரைஸ் ரெடி.!

Written By:

சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ5 (2018) வெளியீடு சார்ந்த பணிகளில் மும்மரமாக உள்ளது. கண்டிப்பாக வரும் 2018 ஆண்டில் தொடங்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, பல கசிவுகள் மற்றும் வதந்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

சத்தம் போடாமல் சாம்சங் பார்க்கும் வேலைகள்; அடுத்தடுத்த சர்பரைஸ் ரெடி.!

கடந்த வாரம் வெளியான்ப ஒரு கசிவின்படி, கேலக்ஸி எஸ்8 மற்றும் நோட் 8 ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் இன்பினிட்டி டிஸ்பிளே அம்சமானது, கேலக்ஸி ஏ5 (2018) ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்று கூறி சாம்சங் ரசிகர்களின் ஆர்வத்தை கிளப்பியது போக, தற்போது இந்த ஸ்மார்ட்போன் எப்சிசி (FCC) தளத்தில் காணப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, சாம்சங் கேலக்ஸி ஏ5 (2018), சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இன்பினிட்டி டிஸ்பிளே உறுதி.!

இன்பினிட்டி டிஸ்பிளே உறுதி.!

எப்சிசி பட்டியலானது, வரவிருக்கும் ஏ5 (2018) பற்றிய சில விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது இதற்குமுன் வெளியான வதந்திகளைப் போலவே எப்சிசி பட்டியலும், ஏ5 (2018) ஸ்மார்ட்போன் ஆனது எட்ஜ்-டூ-எட்ஜ் ஸ்க்ரீன் கொண்டுவருமென அறிவித்துள்ளது. ஆகமொத்தம் - இன்பினிட்டி டிஸ்பிளே உறுதி.!

பின்புற கேமரா அமைப்புக்கு கீழே கைரேகை சென்சார்.!

பின்புற கேமரா அமைப்புக்கு கீழே கைரேகை சென்சார்.!

டிஸ்பிளேவை தவிர்த்து, ஸ்மார்ட்போன் சில வன்பொருள் மற்றும் மென்பொருள் விவரங்களையும் எப்சிசி வெளிப்படுத்துகிறது. ஏ530என் என்கிற மாதிரியை எண்ணின் கீழ் காணப்பட்டுள்ள இக்கருவி, பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் ஒன்றை அதன் பின்புற கேமரா அமைப்புக்கு கீழே கொண்டுள்ளது.

5.5 இன்ச் டிஸ்ப்ளே (1080 x 2160 பிக்ஸல்).!

5.5 இன்ச் டிஸ்ப்ளே (1080 x 2160 பிக்ஸல்).!

மேலும் இந்த அடுத்த தலைமுறை ஏ தொடர் சாம்சங் ஸ்மார்ட்போன்களானது அதன் முந்தைய தொடர் கருவிகளின் கேமராவுடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட மேம்பாடுகளை பெறுமென்றும் கூறப்படுகிறது. இதர அம்சங்களை பொறுத்தமட்டில், சாம்சங் ஏ5 (2018) ஆனது 1080 x 2160 பிக்ஸல் என்ற தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓரியோ ஓஎஸ்.!

சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓரியோ ஓஎஸ்.!

மேலும் இந்த சாதனம் எக்ஸிநோஸ் 7885 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4ஜிபி ரேம் உடன் இணைந்து வரும். மென்பொருள்களை பொறுத்தமட்டில், சாம்சங் கேலக்ஸி ஏ5 (2018) ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆன ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இயங்க அதிக வாய்ப்புள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

எப்சிசி பட்டியலின் மூலம் அறியப்பட்ட விவரங்கள் தவிர, சாம்சங் நிறுவனமே அதன் தென் கொரிய வலைத்தளத்தின் ஆதரவு பக்கம் வழியாக ஏ5 (2018) ஸ்மார்ட்போனை உறுதி செய்தது. ஆனால் எந்தவிதமான விவரக்குறிப்புகள் சார்ந்த வார்த்தைகளும் பகிரவில்லை.

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்.!

கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்.!

ஏ5 (2018) ஸ்மார்ட்போன் மட்டுமின்றி தென் கொரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சாம்சங், கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகிய முதன்மை ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த இரண்டு முதன்மை தொலைபேசிகள் சார்ந்த பல கசிவுகள் மற்றும் வதந்திகள் ஏற்கனவே குவிந்த வண்ணம் உள்ளன. அதன்படி, எஸ்9 தொடர் தொலைபேசிகளானது, எஸ்8 போன்றே இன்பினிட்டி டிஸ்பிளே கொண்டு எதிர்பார்க்கப்படுகிறது.

வன்பொருள், மென்பொருள்களில் சில வேறுபாடு.!

வன்பொருள், மென்பொருள்களில் சில வேறுபாடு.!

எஸ்9 மற்றும் எஸ்9+ கருவிகளில் வன்பொருள் மற்றும் மென்பொருள் துறைகளில் ஏற்படுத்தப்படும் சில முக்கிய வேறுபாடுகளை தவிர மீதம் எஸ்8 ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்களை அப்படியே தான் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி.!

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி.!

மேலும் சாம்சங் எஸ்9 தொடர் தொலைபேசிகளில்வா க்வால்காம் நிறுவனத்தின் வரவிருக்கும் செயலியான ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி இடம்பெறவும் வாய்ப்புள்ளது. சில வதந்திகளின் படி, சாம்சங் எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் இந்த இந்த செயலியை உட்கொள்ளும் முதல் கருவிகளாக இருக்கலாம்.

எந்த விதமான அதிகாரப்பூர்வமான வார்த்தையும் இல்லை.!

எந்த விதமான அதிகாரப்பூர்வமான வார்த்தையும் இல்லை.!

ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் வரலாமென கூறப்படும் சாம்சங், ஏற்கனவே அதன் எஸ்8 மற்றும் எஸ்8+ பயனர்களுக்கான ஓரியோ மென்பொருளின் பீட்டா பதிப்பை வெளியிட்டதுடன் விரைவில் அதன் இறுதி பதிப்பையும் உருட்டவுள்ளது என்பதும், இதுவரை வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி எந்த விவரத்தையும் சாம்சங் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung Galaxy A5 2018 clears FCC certification, spotted listed on company website. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்