இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ5 (2018).!

சமீபத்தில் வெளியான புதிய லீக்ஸ் தகவலானது சாம்சங் கேலக்ஸி ஏ5 (2018) கருவியின் வடிவமைப்பு பார்வையை நமக்கு தெளிவாக வழங்கியுள்ளது.

|

அடுத்துவரும் சாம்சங் கேலக்ஸி ஏ-தொடர் ஸ்மார்ட்போன்களில், சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் ஆகிய கருவிகளில் இருப்பது போன்ற இன்பினிட்டி டிஸ்பிளே இடம்பெறும் என்பதால், சாம்சங் கேலக்ஸி ஏ5 (2018) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) ஆகிய ஸ்மார்ட்போன்களின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

அதன் விளைவாக, இக்கருவிகள் சார்ந்த லீக்ஸ் மற்றும் வதந்திகளும் எண்ணிலடங்காத வண்ணம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அப்படியாக சமீபத்தில் வெளியான புதிய லீக்ஸ் தகவலானது சாம்சங் கேலக்ஸி ஏ5 (2018) கருவியின் வடிவமைப்பு பார்வையை நமக்கு தெளிவாக வழங்கியுள்ளது.

18: 9 என்கிற திரைவிகிதம்

18: 9 என்கிற திரைவிகிதம்

சாம்மொபைல் வழியாக கசிந்துள்ள இந்த சாம்சங் கேலக்ஸி ஏ5 (2018) ஸ்மார்ட்போன் லீக்ஸ் ஆனது அக்கருவி, 18: 9 என்கிற திரைவிகிதம் கொண்டிருக்கும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்8 உடன் இணைக்கப்படும் வடிவமைப்பில் வருகிறது என்று அர்த்தம்.

பின்புறம் ஒற்றை கேமரா தொகுதி

பின்புறம் ஒற்றை கேமரா தொகுதி

மேலும் கசிந்த ரெண்டர்களின் கீழ், இதன் கைரேகை ஸ்கேனர் ஆனது சாதனத்தின் பின்புறம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதையும் தெளிவாகை காட்டுகிறது. ஒட்டுமொத்த வடிவமைப்பை பொறுத்தமட்டில், கூறப்படும் கேலக்ஸி ஏ5 (2018) ஆனது முனையில் வட்டங்கள் கொண்ட மற்றும் பின்புறம் ஒற்றை கேமரா தொகுதி கொண்ட ஒரு சாதனமாகும்.

வேறொரு வண்ண நிழலைக் காண்பிக்கிறது

வேறொரு வண்ண நிழலைக் காண்பிக்கிறது

மேலும் கேலக்ஸி ஏ5 (2018) ஸ்மார்ட்போன் அதன் வலது குழுவில் பவர் பொத்தானையும் மற்றும் அதன் இடது பக்கத்தில் வால்யூம் கட்டுப்பாடு பொத்தானையும் கொண்டுள்ளது. மேலும் அதன் இடது பலகத்தில் ஒரு கூடுதல் பொத்தானும் உள்ளது. ஒலிக்ஸார் பேக் கவர் உடன் காட்சியளிக்கும் ஏ5 (2018) ஸ்மார்ட்போன் வேறொரு வண்ண நிழலைக் காண்பிக்கிறது ஆகையால் அதன் சரியான வெளிப்புற வடிவமைப்பை அறிந்துகொள்ள முடியவில்லை.

ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு

ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு

நிறுவனத்தின் கேலக்ஸி ஏ-தொடர் ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில், சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017) மற்றும் கேலக்ஸி ஏ7 (2017) ஆகியவைகள் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டன. சாம்சங் கேலக்ஸி ஏ (2017) தொடர் ஸ்மார்ட்போன் ஆனது ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பை கொண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீமியம் வடிவமைப்பு

பிரீமியம் வடிவமைப்பு

மேலும் இக்கருவிகள் ஒரு உலோக சட்டம் மற்றும் 3டி கிளாஸ் பேக் பேனல்இ கொண்டு நிறுவனத்தின் பிரீமியம் வடிவமைப்பு கொண்டு வெளியாகின. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017) இந்தியாவில் ரூ.28,990/-க்கும், சாம்சங் கேலக்ஸி ஏ7 (2017) ஆனது ரூ.33.490/-க்கும் கிடைக்கிறது.

குறைந்த-ஒளி தேர்வுமுறை கொண்ட

குறைந்த-ஒளி தேர்வுமுறை கொண்ட "மேம்பட்ட" கேமராக்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017) மற்றும் கேலக்ஸி ஏ7 (2017) ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, அதன் கேலக்ஸி எஸ்7 பாணியிலான ​​வடிவமைப்பு, குறைந்த-ஒளி தேர்வுமுறை கொண்ட "மேம்பட்ட" கேமராக்கள் மற்றும் உணவுப் பயன்முறை கொண்ட எளிமையான கேமரா யூஎக்ஸ் ஆகியவைகளை குறிப்பிட்டு கூறலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A5 (2018) Case Renders Leaked, Giving a Glimpse of Design. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X