48எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துவருகிறது,தற்சமயம் இந்நிறுவனம் பதிய சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை 6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

வெளிவந்த தகவலின் படி 48எம்பி பிரைமரி கேமரா+8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டாகோர் எக்சைனோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போனில் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 5ஜி, 4ஜி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் ரூ.36,600-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications