Home
Mobile

மூன்று ரியர் கேமராக்களுடன் அசத்தலான கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையான மென்பொருள் வசதி, மூன்று ரியர் கேமரா, உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ41

சாம்சங் கேலக்ஸி ஏ41

சாம்சங் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் ஆனது கருப்புஇ நீலம் மற்றும் வெள்ளை உள்ளிட்ட மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் IP58சான்றிதழ் உடன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 2020 முதல் டொகோமோவிலிருந்து வாங்குவதற்கு கிடைக்கும்.

2340 x 1080 பிக்சல் திர்மானம்

2340 x 1080 பிக்சல் திர்மானம்

வெளிவந்த கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் யுஆழுடுநுனு இன்பினிட்டி டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதி

மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதி

கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் மாடலில் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

கேலக்ஸி ஏ41 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

3500எம்ஏஎச் பேட்டரி

3500எம்ஏஎச் பேட்டரி

இந்த கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும்இவற்றுள் அடக்கம், எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார்என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறுஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

கேலக்ஸி ஏ41

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்டிஇ, புளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை சிம் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் இன்னும் வரவில்லை தெரிந்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A41 Launched: Check Price, Specs and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X