48MP கேமராவுடன் உலக சந்தைக்குள் நுழைந்த Samsung கேலக்ஸி A41! விலை என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி A41 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இப்போது சாம்சங் நிறுவனம் ஜப்பானில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கேலக்ஸி A41 ஸ்மார்ட்போனை உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன், 6.1. இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்பிளேயுடன் கூடிய 2340 x 1080 பிக்சல்கள் ரெசொலூஷன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் (டூயல் 2.0GHz + ஹெக்ஸா 1.7GHz) பிராசஸருடன், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் சேமிப்புடன் களமிறங்கியுள்ளது.

512 ஜிபி வரை ஸ்டோரேஜ் நீதிபு அம்சம்
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன், மைக்ரோ எஸ்டி கார்டு சேவையையும் வழங்குகிறது. மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி வரை பயனர்களால் ஸ்டோரேஜ் அம்சத்தை நீட்டித்துக்கொள்ள முடியும். சாம்சங் கேலக்ஸி A41 சாதனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் சேவையுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் பேட்டரி விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

ட்ரிபிள் கேமரா அமைப்பு
புதிய சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா ஒன்றும், 8 மெகா பிக்சல் கொண்ட வைடு-ஆங்கிள் லென்ஸ் கேமராவும் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அட்டகாசமான செல்ஃபி அனுபவத்திற்காக முன்பக்கத்தில் 25 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி ஷூட்டர் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி அம்சம்
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன், ஜப்பானிய பதிப்பைப் போலவே வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் பாதுகாப்புடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி A41, அண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கூடிய நிறுவனத்தின் தனிப்பயன் பயனர் இடைமுகமான ஒன்யூஐ 2.0 உடன் இயங்குகிறது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பு விபரங்கள்
புதிய சாம்சங் கேலக்ஸி A41 ஸ்மார்ட்போன் இணைப்பு விபரங்களைப் பொறுத்தவரை, இது 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 5.0, வைஃபை, ஜிபிஎஸ், க்ளோனாஸ் (GLONASS), என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை சிம் ஆதரவை ஆதரிக்கிறது.

விலை என்ன?
இந்த சாம்சங் கேலக்ஸி A41 விலை இந்திய விலை தோராயமாக ரூ.24,670 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்பஹோனே ப்ரிஸம் க்ரஷ் பிளாக், ப்ரிஸம் க்ரஷ் ஒயிட், பிரிசம் க்ரஷ் ப்ளூ மற்றும் பிரிசம் க்ரஷ் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications