ரூ.12,000 மட்டுமே: samsung Galaxy A41, A11 அதிகாரப்பூர்வ விலை., 3 ரியர், 25 எம்பி செல்பி கேமரா!

|

சாம்சங் நிறுவனத்தின் ஏ 11 மற்றும் ஏ 41 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் முன்னதாகவே வெளியானாலும் அதன் விலை அம்சங்கள் தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 11 மற்றும் ஏ 41 ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ 11 மற்றும் ஏ 41 ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ 11 மற்றும் ஏ 41 ஸ்மார்ட்போன்களை மார்ச் மாதத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் வெளிவந்த போதிலும் விலையை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சாம்சங் இப்போது இரண்டு தொலைபேசிகளின் விலையையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ41

சாம்சங் கேலக்ஸி ஏ41

சாம்சங் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் ஆனது கருப்புஇ நீலம் மற்றும் வெள்ளை உள்ளிட்ட மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் IP58சான்றிதழ் உடன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது.

IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!

2340 x 1080 பிக்சல் திர்மானம்

2340 x 1080 பிக்சல் திர்மானம்

2340 x 1080 பிக்சல் திர்மானம் வெளிவந்த கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் யுஆழுடுநுனு இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது.

மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதி

மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதி

கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் மாடலில் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

கேலக்ஸி ஏ41 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

3500எம்ஏஎச் பேட்டரி

3500எம்ஏஎச் பேட்டரி

இந்த கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இவற்றுள் அடக்கம், எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

கேலக்ஸி ஏ11 டிஸ்பிளே வசதி

கேலக்ஸி ஏ11 டிஸ்பிளே வசதி

இந்த கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் இன்பினிட்டி-ஒ-டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, 720 x 1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ11 கேமரா

கேலக்ஸி ஏ11 கேமரா

கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ராவைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பலவேறு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் வசதி மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி நம்ம காலம்., அடிதூள்:சீனா வேணாம் இந்தியாக்கே வரோம்-முதலில் Apple,இப்போ Lava ரூ.800 கோடி முதலீடுஇனி நம்ம காலம்., அடிதூள்:சீனா வேணாம் இந்தியாக்கே வரோம்-முதலில் Apple,இப்போ Lava ரூ.800 கோடி முதலீடு

samsung Galaxy A41, A11 விலை விவரங்கள்

samsung Galaxy A41, A11 விலை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ 41, விலை சுமார் ரூ. 24,000- க்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொலைபேசி 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்புடன் வருகிறது. இந்த சாதனத்திற்கான முன்கூட்டிய ஆர்டர்கள் நெதர்லாந்தில் தொடங்கியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கேலக்ஸி ஏ 11 ஸ்மார்ட்போன்கள். இந்த தொலைபேசி தாய்லாந்தில் THB 5,199 (சுமார் ரூ .12,300) க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசி தாய்லாந்தில் உள்ள சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் கிடைக்கும்.

source: gadgets.com

Best Mobiles in India

English summary
samsung Galaxy A41, A11 price revealed, price, availability details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X