5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ40 என்ற சாதனத்தை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ40 என்ற சாதனத்தை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பின்புறம் கரேகை சென்சார் ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. பின்பு கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்
என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.9-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எக்ஸிநோஸ் 7885:
கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை குவால்காம் எக்ஸிநோஸ் 7885 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பாரப்புகளை உருவாக்கியுள்ளது.

சேமிப்பு:
கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

பேட்டரி:
கேலக்ஸி ஏ40 சாதனத்தில் 3100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, 3ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications