கேலக்ஸி ஏ4 (2017) : சான்றிதழ் வலைத்தளத்தில் சிக்கி வெளியான அம்சங்கள்.!
சாம்சங் கேலக்ஸி ஏ4 (2017 ஒரு குவாட் கோர் எக்சிநோஸ் செயலி பொருத்தப்பட்டு வர வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சிப்செட் பெயரை குறிப்பிடப்படவில்லை.
சாம்சங் கேலக்ஸி ஏ4 (2017) கருவியானது மாடல் எண் எஸ்எம்-ஏ450எப் என்ற பெயர் கொண்டு வைஃபை சான்றிதழ் பெற்றுள்ளதாக விபோ, சீன மைக்ரோ வலைப்பதிவிடல் தளம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

விபோ கசிவின் படி சென்றால், இந்த சாதனம் வடிவமைப்பு அடிப்படையில் கிட்டத்தட்ட சாம்சங் கேலக்ஸி ஏ3 போன்றே இருக்கும். அதுமட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி ஜே7 (2017) உடனும் சில ஒற்றுமைகளை கொண்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் கூடுதலாக கேலக்ஸி ஏ4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் சிலவற்றை கொடுத்துள்ளது. உதாரணமாக, இந்த ஸ்மார்ட்போன் வெளிப்படையாக சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் யூஐ உடனான ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளம் கொண்டு வரும்.

சாதனத்தின் வன்பொருளை பொறுத்தமட்டில், சாம்சங் கேலக்ஸி ஏ4 (2017 ஒரு குவாட் கோர் எக்சிநோஸ் செயலி பொருத்தப்பட்டு வர வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சிப்செட் பெயரை குறிப்பிடப்படவில்லை. சேமிப்பக வாரியாக, 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் 3 ஜிபி ரேம் கொண்டு வரலாம் என்று வதந்திகள் பரவியுள்ளன.
மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் மூலம் 256 ஜிபி வரை சேமிப்பு திறனை விரிவாக்கலாம். 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியை ஈர்க்கும் இக்கருவி ஒரு யூஎஸ்பி டைப் சி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது.
ஒளியியல் துறையை பொறுத்தவரையில், சாம்சங் கேலக்ஸி ஏ4 (2017) எப் / 1.9 துளையுடன் 13எம்பி பின்புறம் எதிர்கொள்ளும் முதன்மை கேமரா கொண்டுவரலாம். துரதிருஷ்டவசமாக, செல்பீ கேமரா சார்ந்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. ரியார் கேமராவை பொறுத்தமட்டில் சாம்சங் கேலக்ஸி ஜே5 (2017) போலவே இது 13எம்பி முன்பக்க கேமராவைகொண்டிருக்கலாம். இது தவிர, கேலக்ஸி ஏ4 (2017) ஒரு 5 அங்குல ,முழு எச்டி சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications