Home
Mobile

சைனீஸ் போன்லாம் கிளம்பு காத்து வரட்டும்.. தரமான கேமராக்களுடன் Samsung-ன் 2 புதிய 5ஜி போன்கள்!

என்னடா ஆள் ஆளுக்கு என் வாத்தியாரை பல்ல புடிச்சு பாக்குறீங்க என்று சாம்சங் ரசிகர்கள் எல்லோரும் செம்ம கடுப்பில் இருக்கிறார்கள். இந்த 2025 இல் கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன் நிறுவனங்களுமே.. நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் எச்எம்டி உட்பட.. பட்ஜெட் மற்றும் மிட்ரேன்ஜ் பிரிவின் கீழ் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன; விரைவில் செய்யவுள்ளன.

ஆனால் சாம்சங் நிறுவனமோ கேலக்ஸி எஸ்25 சீரீஸ், கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7, கேலக்ஸி இஸட் ஃபிளிப் 7, கேலக்சிஸி இஸட் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் என பிரீமியம் / பிளாக்ஷிப் / ஹை-எண்ட் மாடல்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி உள்ளது.

 தரமான கேமராக்களுடன் Samsung-ன் 2 புதிய 5ஜி போன்கள்!

ஒருவழியாக சாம்சங் நிறுவனம் சமநிலையை கொண்டுவர முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ-சீரீஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. அவைகள் சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A37) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57) மாடல்கள் ஆகும்.

இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே குறிப்பிடத்தக்க கேமரா ஹராட்வர் மேம்படுத்தல்களுடன் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. ஸ்மார்ட்பிரிக்ஸ் வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ37 மற்றும் கேலக்ஸி ஏ57 ஆகிய இரண்டுமே வெளியாகும் பிராந்தியத்தை பொறுத்து சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் அல்லது சாம்சங்கின் இன்டர்னல் ஐசோசெல் எஸ்5கேஜிஎன்ஜே சென்சாரை உள்ளடக்கிய புதிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பேக் செய்யலாம்.

மேலும் இந்த இரண்டு சென்சார்களும் லார்ஜர் 1/1.56-இன்ச் ஆப்டிகல் ஃபார்மெட்டை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது பழைய கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போனில் உள்ள 1/1.95-இன்ச் சென்சாரிலிருந்து குறிப்பிடத்தக்க மேம்பாடு ஆகும். ஒரு லார்ஜர் சென்சார் அதிக ஒளி உட்கொள்ளலை அனுமதிக்கிறது, இது டைனமிக் ரேன்ஜ், குறைந்த-ஒளி செயல்திறன் மற்றும் படத் தெளிவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போனில் 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் து 12-மெகாபிக்சல் ஐசோசெல் எஸ்5கே3எல்சி சென்சாரைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன் ஆனது அதே மேம்படுத்தப்பட்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பகிர்ந்து கொண்டாலும், மிகவும் மிதமான இரண்டாம் நிலை சென்சார்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, இது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் அதே 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். இது இரண்டு மாடல்களுக்கும் இடையே தெளிவான கேமரா ஹார்ட்வேர் வேறுபாட்டை உருவாக்குகிறது.

எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? முந்தைய அறிக்கைகள் துல்லியமாக இருந்தால், சாம்சங் கேலக்ஸி ஏ37 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஆகிய 2 மாடல்களுமே பிப்ரவரி 2026 இல் அறிமுகப்படுத்தலாம், அதாவது அதன் வழக்கமான 2026 மார்ச் அட்டவணையை விட சற்று முன்னதாக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 க்குள் (ரூ.34,990) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள சம்சந்த் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.45,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் (ரூ.45,990) அறிமுகம் செய்யப்படலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்வைஸ்-போல்டிங் ஸ்மார்ட்போன் (Twice-folding smartphone) ஆக சாம்சங் கேலக்ஸி இஸட் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் டிசம்பர் முதல் வாரத்தில் அறிமுகமானது. இதுமுழுமையாக விரிக்கப்படும் போது 10.0-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவையும் வழங்கும், அதே நேரத்தில் 6.5-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளேவையும் வழங்கும். இந்திய விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A37 Galaxy A57 Camera Specifications leaked Ahead 2026 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X