Home
Mobile

Samsung நீ சிங்கம் தான்.. சிங்கிள் சார்ஜில் 53 மணிநேர பேட்டரி, நீருக்குள் 30 நிமிடங்கள் தாங்கும் புது போன்!

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்26 சீரிஸை அறிமுகம் செய்த கையோடு, சாம்சங் நிறுவனம் 2 புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அவைகள் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி (Samsung Galaxy A37 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்த்தும்படியாக கேலக்ஸி ஏ37 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ57 5ஜி மாடல்களின் பேட்டரி என்ட்யூரன்ஸ் (Battery endurance) மற்றும் டிவைஸ் ட்யூரபிலிட்டி (device durability) குறித்த விவரங்கள் லீக் ஆகி மொபைல் மார்க்கெட்டில் "சலசலப்புகளை" கிளப்பி உள்ளன.

Samsung நீ சிங்கம் தான்.. சிங்கிள் சார்ஜில் 53 மணிநேர பேட்டரி!

மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களின் வெற்றியை தீர்மானிக்கும் பல காரணங்களில் - பேட்டரி லைஃப்பும் ஒன்றாகும். கிடைக்கப்பட்டுள்ள விவரங்களை பார்க்கும் போது வரவிருக்கும் 2 கேலக்ஸி ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே பேட்டரி லைஃப்பில் எந்த குறையும் வைக்காது என்பது போல் தெரிகிறது.

NieuweMobiel வழியாக கிடைத்துள்ள தரவுகளின்படி, கேலக்ஸி ஏ37-ஐ ஒரு முறை சார்ஜ் செய்தால் அது 53 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும். மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ57-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் அது 52 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும். இந்த தரவுகள் முன்னதாக வெளியான கேலக்ஸி ஏ36 மற்றும் கேலக்ஸி ஏ56 வழங்கிய (முறையே) 41 மணிநேரங்கள் மற்றும் 44 மணிநேரங்களை விட அதிகமாகும்.

பேட்டரி சகிப்புத்தன்மையின் அடிப்படையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. மேலும் பேட்டரியின் லாங்கிட்டிவிட்டி ஆனது 1200 சார்ஜ் சுழற்சிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் 2,000 சார்ஜிங் சுழற்சிகளை விட குறைவாக தெரிகிறது. இருப்பினும், சில நிபுணர்கள் இந்த மாற்றம் தற்போதைய பேட்டரி தரத்தில் சரிவை விட புதிய இயு சோதனை விதிமுறைகளால் ஏற்பட்டதாக நம்புகின்றனர்.

இதுவொரு பக்கம் இருக்க இந்த 2 புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களுமே IP68 ரேட்டிங் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக கேலக்ஸி ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது IP67 ரேட்டிங்கையே பெறுகின்றன. இது நல்ல பாதுகாப்பை வழங்குகிறது தான், ஆனால் முதன்மை தரத்தை விட சற்று குறைவான பாதுகாப்பையே வழங்குகிறது.

IP68 ரேட்டிங்கிற்கு மாறுவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் 1.5 மீட்டர் வரை தண்ணீரில் 30 நிமிடங்கள் மூழ்குவதை தாங்கும். உருவாக்க தரமும் இந்த இரண்டு கேலக்ஸி ஏ-சீரீஸ் மாடல்களுக்கும் இடையிலான சில சுவாரஸ்யமான வேறுபாடுகளை காட்டுகிறது. இரண்டுமே தினசரி தேய்மானத்தை நன்கு கையாளும்படி உருவாக்கப்பட்டுள்ளது

ஆனால் சாம்சங் கேலக்ஸி ஏ57 மாடல் ஆனது வீழ்ச்சி எதிர்ப்பிற்கு அதிக "A" ரேட்டிங்கை பெற்றுள்ளது. அதே நேரத்தில் கேலக்ஸி ஏ37 மாடலானது "B" ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஆக கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது சற்று வலுவூட்டப்பட்ட பொருட்கள் அல்லது வேறு தர கிளாஸை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கலாம்.

எப்போது அறிமுகமாகும்? 2026 ஆம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படலாம். மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை - இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் புதிய எக்ஸினோஸ் 1680 மற்றும் 1480 சிப்செட்களை எதிர்பார்க்கலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் 120Hz AMOLED டிஸ்பிளேக்களை பேக் செய்யலாம். இப்போதைக்கு, விலை நிர்ணயம் என்பது ஒரு ஊகப் பொருளாகவே உள்ளது. கேலக்ஸி ஏ37 5ஜி ரூ.34,990 க்கும், கேலக்ஸி ஏ57 5ஜி ரூ.45,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A37 Galaxy A57 Battery Life IP68 Rating Details leaked Launching in March
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X