2026 இல் இந்தியாவே எதிர்பார்த்த Samsung 5ஜி போன் வருது.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி (Samsung Galaxy A37 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A37 5G Specifications): 4905mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தி உள்ளது சாம்சங் நிறுவனம்.
Geekbench தளத்தில் வெளியான தகவலின்படி, சக்திவாய்ந்த எக்ஸ்நோஸ் 1480 (Exynos 1480) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது. 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 அல்லது 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ யுனிட் உள்ளிட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6.7-இன்ச் சூப்பர் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இருக்கும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 6.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








