Home
Mobile

கேப்பு விடாம இறக்கும் Samsung.. இன்னொரு புது 5ஜி போன்.. 6GB ரேம், ஆண்ட்ராய்டு 16, எக்ஸினோஸ் 1490 சிப்செட்!

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ-சீரிஸின் கீழ் மேலும் ஒரு புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யலாம் என்பது போல் தெரிகிறது. ஏற்கனவே சாம்சங்கின் கேலக்ஸி ஏ57 மற்றும் கேலக்ஸி ஏ77 ஆகிய 2 மாடல்களும் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுவரும் நிலையில் மூன்றாவதாக இன்னொரு மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்பது போல் தெரிகிறது.

அது சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A37) ஸ்மார்ட்போனாக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ளதை உறுதிப்படுத்தும் படியாக சாம்சங் கேலக்ஸி ஏ37 மாடலின் சில முக்கிய அம்சங்கள் (கீக்பெஞ்ச் லிஸ்ட்டிங் வழியாக) ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

கேப்பு விடாம இறக்கும் Samsung.. இன்னொரு புது 5ஜி போன்!

சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 6ஜிபி ரேம் உடன் வரலாம். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டு இயக்கப்படலாம். இது எக்ஸினோஸ் 1490 சிப்செட் (Exynos 1480 Chipset) உடன் இயக்கப்படலாம் என்றும், இந்த சிப்செட் எக்ஸ்லிப்ஸ் 530 ஜிபியு (Xclipse 530 GPU) உடன் இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது

நினைவூட்டும் வண்ணம் கடந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ55 (Samsung Galaxy A55) ஸ்மார்ட்போனிலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்56 (Samsung Galaxy M56) மாடலிலும் இதே சிப்செட் தான் உள்ளது.

எக்ஸினோஸ் 1490 சிப்செட் ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Snapdragon 6 Gen 3)சிப்செட்டை விட சற்று வலிமையாக தெரிகிறது. ஆனால் செயல்திறன் தான் இங்கே மிகவும் முக்கியம். அதுகுறித்த சரியான விவரங்கள் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தவுடன் மட்டுமே நமக்கு தெரியும்.

எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ27 (Samsung Galaxy A27), கேலக்ஸி ஏ37 மற்றும் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57) ஆகிய மாடல்களை 2026 வசந்த கால வெளியீட்டிற்கு தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆக எப்படி பார்த்தாலும் ஏ37 மாடல் அடுத்த 2026 இல் தான் அறிமுகமாகும். இந்தியாவில் இது ரூ.34,990க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சாம்சங் கேலக்ஸி ஏ77 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 மாடல்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ​கீக்பெஞ்ச் லிஸ்ட்டிங் வழியாக இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஆப்ரேட்டிங் சிஸ்டம், சாம்சங் எக்ஸினோஸ் சிப்செட்கள், 8ஜிபி ரேம் (கேலக்ஸி ஏ77) மற்றும் 12ஜிபி ரேம் (கேலக்ஸி ஏ57) உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் சரியுமான லான்ச் டைம்லைன் குறித்து எந்த தகவலும் இல்லை.

என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? ஸ்மார்ட்ப்ரைஸ் வலைத்தளத்தின்படி சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.45,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ77 ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்கள் இல்லை.இதுவும் பெரும்பாலும் ரூ.50,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் 2026 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை - அது கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்கள் தான். இந்த சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A37 5G Tipped to Pack Exynos 1480 Chipset See Launch Timeline Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X