நச் விலையில் புது Samsung போன்.. 5ஜி, 5000mAh பேட்டரி, 45W சார்ஜிங், 50MP கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் அடுத்த கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதன் கீழ் புதிதாக சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி (Samsung Galaxy A37 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) மாடல்கள் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, இவ்விரு ஸ்மார்ட்போன்களும் இன்னும் சில தினங்களில் (மார்ச் மாத இறுதிக்குள்) அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வண்ணம், நேற்று கேலக்ஸி ஏ57 ரீடெயில் பாக்ஸ் லீக் ஆகி இருந்தது, இன்று கேலக்ஸி ஏ57 மற்றும் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன்களின் புரமோஷன் மெடீரியல் (Promo Material) ஆன்லைனில் வெளியாகி, கேலக்ஸி ஏ37 மாடலின் விலையை வெளிப்படுத்தி உள்ளது.

லீக் ஆன போஸ்டரில், கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி வேரியன்ட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.36,000 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி விலை பிராந்தியத்தை பொறுத்து மாறுபடும் என்பது வெளிப்படை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கேலக்ஸி ஏ37 ஆனது ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான லீக்ஸ், சாம்சன் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வரும் என்று குறிப்பிட்டிருந்தன. நிச்சயம் இது இன்னும் மலிவான விலைக்கு வரும். ஆனால் இதற்கான விலை விவரங்கள் எதுவும் லீக் ஆகிவில்லை.
கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முக்கிய அம்சங்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ37 ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இது சாம்சங்கின் எக்ஸினோஸ் 1480 சிப் உடன் இயக்கப்படலாம்
கேமரா செட்டப்பில் 50எம்பி ப்ரைமரி சென்சார், கூடுதலாக 8எம்பி அல்ட்ரா-வைட் மற்றும் 5எம்பி மேக்ரோ லென்ஸ்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், 12எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை 5000mAh என்று பட்டியலிடப்பட்டுள்ளது, இது 45W பாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்படலாம். இது ஒரு முழு நாள் பயன்பாட்டிற்கு போதுமானதை விட அதிகமாக இருக்கும்.
சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 8.5-இல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன்ஒரு நல்ல மேம்படுத்தலாகவே தெரிகிறது. அனைத்து சந்தைகளிலும் இதன் விலை நிலையாக இருந்தால், அதிகாரப்பூர்வமாக அறிமுகத்திற்கு பின்னர் இது சாம்சங்கின் மற்றொரு நம்பகமான மிட்-ரேன்ஜ் ஆப்ஷனாக இருக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி தாய்லாந்தில் உள்ள ஒரு கடையில் ரீடெயில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த கேலக்ஸி ஏ37 மற்றும் கேலக்ஸி ஏ37 யூனிட்களின் வீடியோக்கள் நேற்று லீக் ஆகி இருந்தன. அந்த வீடியோக்களின் வழியாக கேலக்ஸி ஏ57 5ஜி மாடலின் எம்ஆர்பி விலையும் லீக் ஆகி இருந்தது
அதன்படி கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.51,182 என்றும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.59,685 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒப்பீட்டளவில் பழைய மாடலை விட விலை அதிகமாகும்,


Click it and Unblock the Notifications








