Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. வருகிறது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது BIS சான்றிதழ் தளத்தில் தற்போது இந்த சாம்சங் போன் காணப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக BIS சான்றிதழ் தளத்தில் SM-A366E/DS என்ற மாடல் நம்பர் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் காணப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ36 அம்சங்கள் (Samsung Galaxy A36 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் வெளிவரும் அதேபோல் இந்த போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே(flat AMOLED Display)உடன் அறிமுகம் இந்த சாம்சங் போன் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி.

சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers),5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக ரூ.30,000 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: notebookcheck, samsung

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A36 Spotted on BIS Certification Site: India Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X