Home
Mobile

மார்ச் வரை எந்த போனும் வாங்காதீங்க.. AMOLED டிஸ்பிளே.. இந்தியாவுக்கும் வரும் இரண்டு Samsung 5ஜி போன்கள்..

சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ56 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த இரண்டு சாம்சங் போன்களின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 அம்சங்கள் (Samsung Galaxy A36 Specifications): 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display)உடன் அறிமுகம் இந்த சாம்சங் போன் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

 இந்தியாவுக்கும் வரும் இரண்டு Samsung 5ஜி போன்கள்.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), போன்ற அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி ஏ56 அம்சங்கள் (Samsung Galaxy A56 Specifications): 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

எக்ஸ்நோஸ் 1580 (Exynos 1580) சிப்செட் உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் Xclipse 540 GPU கிராபிக்ஸ் ஆதரவு இதில் உள்ளது. One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

 இந்தியாவுக்கும் வரும் இரண்டு Samsung 5ஜி போன்கள்.. எந்த மாடல்?

50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 போன். மேலும் 12எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), போன்ற அம்சங்சகளுடன் இந்த போன் வெளிவரும்.

ஆன்லைன் கசிந்த தகவலின்படி இந்த இரண்டு சாம்சங் போன்களும் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன சாம்சங் கேலக்ஸி ஏ36 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன்கள்.

photo credit: mobilissimo, 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A36, Galaxy A56 India launch timeline leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X