நீ வா வாத்தியாரே.. 12எம்பி செல்பி கேமரா.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்வென்றால் நீண்ட வருடங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவருகின்றன இந்நிறுவனத்தின் போன்கள். எனவே தான் சாம்சங் நிறுவனத்தின்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். தற்போது இந்த போனின் சில விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 அம்சங்கள் (Samsung Galaxy A36 Specifications): மற்ற சாம்சங் போன்களை விட இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் தனித்துவமான கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதுவும் 12எம்பி செல்பி கேமரா (12MP selfie camera) வசதி இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமரா உடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. பின்பு மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சூப்பர் அமோஎல்இடி பிளஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகளுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
photo credit: @ONLEAKS x @GIZNEXT


Click it and Unblock the Notifications