வெளுக்குது விற்பனை.. 34 சதவீத ஆஃபரில் Samsung 5G.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 (Flipkart Big Billion Days 2026) என்னும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 34 சதவீத தள்ளுபடியுடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.1,300 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,699 விலைக்கு வாங்கலாம். இதுபோக 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 2340 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிஸ்பிளே பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Qualcomm Snapdragon 6 Gen 3) 4என்எம் சிப்செட் இடம்பெற்றுள்ளது. கிராபிக்ஸ் வசதிக்காக அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் லேக்-ப்ரீ டெய்லி யூசேஜ், மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
ஓஎஸ் அப்கிரேட்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) உடன் கிடைக்கிறது. இந்த மாடலுக்கு 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களை சாம்சங் வழங்குகிறது. மேலும், பர்சனல் டேட்டா பாதுகாப்பிற்காக நாக்ஸ் வால்ட் (Knox Vault) வசதியும் இடம்பெற்றுள்ளது.
டிஸ்பிளேவின் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க விஷன் பூஸ்டர் (Vision Booster) அம்சமும் இதில் உள்ளது. கேமராவை பொறுத்தவரை, இந்த போனில் 50MP மெயின் கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 5MP மேக்ரோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மெயின் கேமராவுடன் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியும் கிடைக்கிறது.
இதன் மூலம் போட்டோக்கள் எடுக்கும்போதும், வீடியோக்களை ரெக்கார்டிங் செய்யும்போதும் ஏற்படும் ஷேக்குகளை குறைக்க முடியும். மேலும், இந்த ஸ்மார்ட்போனின் மெயின் கேமரா மூலம் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம். 10X டிஜிட்டல் ஜூம் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் சப்போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 12MP பரன்ட் கேமரா இடம்பெற்றுள்ளது.
இதுதவிர, IP67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் இருப்பதால், ஒட்டுமொத்த பாடிக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. பேட்டரியை பொறுத்தவரை, இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை விரைவாக சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 7.4mm தடிமன் மற்றும் 195 கிராம் எடையுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பு மற்றும் ஆடியோ அனுபவத்திலும் தேவையான வசதிகளை வழங்குகிறது. டார்க் ப்ளூ, டார்க் கிரீன், அவ்சம் பிளாக், அவ்சம் லைம், அவ்சம் லாவெண்டர் மற்றும் அவ்சம் ஒயிட் ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
