Home
Mobile

பொளந்து கட்டுது ஆர்டர்.. ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, IP67 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) போனுக்கு பக்காவான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மட்டுமல்லாமல், 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனின் விலை மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அமேசான் விற்பனை (Samsung Galaxy A36 5G Amazon Sale): இந்த சாம்சங் போனானது, மூன்று வேரியண்ட்களில் வெளியானது, அப்போது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆக இருந்தது.

பொளந்து கட்டுது ஆர்டர்.. ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே!

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.38,999ஆக இருந்தது. இப்போது, ரூ.2,000 விலை குறைப்பு போக மார்கெட்டில் கிடைக்கிறது. அதாவது, அமேசான் தளத்தில் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.30,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.33,999 பட்ஜெட்டிலும் வருகிறது.

மேலும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.36,999 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. இந்த விலை குறைப்புக்கு அடுத்தபடியாக எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ஒவ்வொரு வேரியண்ட்டையும் ரூ.4,000 டிஸ்கவுண்ட்டில் பெற்று கொள்ளலாம்.

இதன் மூலம் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.28,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.31,999 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.34,999 பட்ஜெட்டிலும் இப்போது வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை இந்த சாம்சங் கொடுக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5G Specifications): இந்த போனுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம்.

மேலும், விஷன் பூஸ்டர் (Vision Booster) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் பேக் செய்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் முன்பே சொன்னதை போல 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களை கொடுக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (OneUI 7) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 6என்எம் (Octa Core Snapdragon 6 Gen 3 6nm) வருகிறது. இந்த சாம்சங் போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா (OIS டெக்னாலஜி) + 8 எம்பி அல்ட்ரா வைடு + 5 எம்பி மேக்ரோ செட்டப் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A36 5G With 8GB RAM Available At Discounted Price in Amazon Here Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X