விட்ராதீங்க சார்.. ரூ.4,000 விலை கம்மி.. பட்ஜெட்ல SAMSUNG போன்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வெளியாகி ஒரு மாதம் தாங்க முடிஞ்சிருக்கு அதுக்குள்ள ரூ.4,000 விலை கம்மியான கிடைக்குதா? என்று மூக்கில் விரல் வைக்கும்படியான விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) போன் கிடைக்கிறது. இப்போது பட்ஜெட்டில் மிட்-பிரீமியம் பீச்சர்கள் கிடைக்கும்படியான விலைக்கு வந்துவிட்டது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனின் பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களுக்கு செல்வோம்.
சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி முக்கிய அம்சங்கள் (Samsung Galaxy A36 5G Key Specifications): இந்த சாம்சங் போனுக்கு 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருவதால், ஆண்ட்ராய்டு 21 ஓஎஸ் வரையில் அப்டேட்டை பெற முடியும். இதுபோக ஒன் யுஐ 7 (OneUI 7) மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) சப்போர்ட் உள்ளது.

மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும்படி ஆக்டா கோர் 6என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core 6nm Snapdragon 6 Gen 3) சிப்செட் கிடைக்கிறது. ஓஎஸ் மட்டுமல்லாமல், 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) டிஸ்பிளே உள்ளது.
அதேபோல பாடிக்கு IP67 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த வாட்டர் ரெசிஸ்டன்ட் மூலம் 1 மீட்டர் ஆழம் + 30 நிமிடங்கள் வரையில் புரொடெச்கன் எதிர்பார்க்கலாம். 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
மேலும், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் விஷன் பூஸ்டர் சப்போர்ட் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) மற்றும் 12 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization), ஆட்டோ போகஸ் (Auto Focus), 10X ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) டைப்-சி ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. லாவண்டர் (Awesome Lavender) மற்றும் ஆவ்சம் ஒயிட் (Awesome White) மற்றும் ஆவ்சம் பிளாக் (Awesome Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.32,999 ஆக இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.35,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.38,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2,000 விலை குறைப்பு மற்றும் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.28,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








