பிச்சிக்குது பிளிப்கார்ட்.. ஆபர் ரேட்ல Samsung 5ஜி போன்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி மாடல்!
பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கொடுக்கும் சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு சரியான நேரம் வந்துவிட்டது. விஷன் பூஸ்டர், க்நாக்ஸ் வால்ட் மட்டுமல்லாமல், சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 5000mAh பேட்டரியுடன் தள்ளுபடியில் ஏ சீரிஸ் மாடல் கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலையானது 19 சதவீத தள்ளுபடியுடன் ரூ.31,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,600 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.30,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த தள்ளுபடி மற்றும் கிரெடிட் கார்டு தள்ளுபடியை பிளிப்கார்ட் தளத்தில் பெற்று கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5G Specifications): 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் சாம்சங் மாடல்களில் கிடைக்கும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி கிடைக்கிறது. சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. அதேபோல 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. க்நாக்ஸ் வால்ட் (Knox Vault) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
விஷன் பூஸ்ட் (Vision Booster) போன்ற பிரீமியம் பீச்சர்களும் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட மாடலாக இருக்கிறது.
மேலும், இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். வழக்கமாக கிடைக்கும் 10 எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் வருகிறது. அதேபோல மெயின் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. 12 எம்பி முன்பக்க கேமராவை செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக பயன்படுத்தி கொள்ளலாம். IP67 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
வெறும் 7.4 எம்எம் தடிமனுடன் 5000mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியுடன் 195 கிராம் எடை வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo Speakers) இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) மற்றும் ப்ளூடூத் 5.4 கிடைக்கிறது. டார்க் ப்ளூ, டார்க் கிரீன், அவ்சம் பிளாக், அவ்சம் லைம், அவ்சம் லாவெண்டர் மற்றும் அவ்சம் ஒயிட் ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இதில் டார்க் ப்ளூ, டார்க் கிரீன் கலர் வேரியண்ட்கள் லேட்டஸ்ட்டாக சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications