மிரளுது மிட்-ரேஞ்ச்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டில் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) போன் வெளியாகி இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5G Specifications): இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ (One UI 7) கிடைக்கிறது. மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (6nm Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் மாடல்களில் அதிகமாக கிடைக்கும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த கேலக்ஸி போனில் 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இந்த பிரீமியம் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்டிருக்கிறது. இதுபோக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
கேமராவை பார்க்கையில் சாம்சங் போன்களில் வழக்கமாக கிடைக்கும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனில் 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 5000mAh பேட்டரி மற்றும் அதற்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
மேலும், டைப்-சி ஆடியோ (Type-C Audio) மட்டுமல்லாமல், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனானது 7.4 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதேபோல எடையும் 195 கிராம் மட்டுமே வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,999ஆகவும் இருக்கிறது. ஆவ்சம் லாவண்டர் (Awesome Lavender), ஆவ்சம் பிளாக் (Awesome Black) மற்றும் ஆவ்சம் ஒயிட் (Awesome White) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications