இதுதான் புதிய சாம்சங் 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36 5g) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் கேலக்ஸி ஏ36 360 டிகிரி ரெண்டர்ஸ் ( 360-degree renders) படங்களை வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே உடன் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5g Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ36 போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ள
6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) உடன் அறிமுகம் இந்த சாம்சங் போன் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி.
குறிப்பாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் 5000mAh பேட்டரி உடன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போன்கள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








