Home
Mobile

அடுத்த Samsung 5ஜி போன் ரெடி.. பட்ஜெட் விலை.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் கீக்பெஞ் தளத்தில் SM-A366B என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டது. எனவே இந்த போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போன்களின் சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5G Specifications): தரமான எக்ஸிநோஸ் 1380 சிப்செட் ( Exynos 1380 chipset) உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மாரட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

அடுத்த Samsung 5ஜி போன் ரெடி.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ36 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 15 இயங்குதள (Android 15 OS) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இதன் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த Samsung 5ஜி போன் ரெடி.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?

OIS ஆதரவுடன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படும்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வசதி இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் டூயல் சிம், 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: priceinkenya.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A36 5G Features Leaked Online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X