மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. புது டிசைன்.. 50MP கேமரா, 25W சார்ஜிங்.. Samsung 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) ஸமார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மற்ற சாம்சங் போன்களை விட இந்த கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் தற்போது ஆன்லைனில் இந்த போனின் புகைப்படங்கள் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று செங்குத்தாக அமைக்கப்பட்ட கேமராக்களுடன் காணப்படுகிறது. குறிப்பாக மற்ற போன்களை விட இதன் வடிவமைப்பு மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறது. மேலும் செல்பி கேமராவுக்கான பஞ்ச் கட்அவுட் மற்றும் பிளாட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5G Specifications): சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் ஆனது 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே(flat AMOLED Display)உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரியடிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
One UI 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

அதேபோல் 5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers),5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும். மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Photo Credit: Giznext/ @Onleaks


Click it and Unblock the Notifications








