Home
Mobile

உலகமே வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புதிய சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5g) ஸ்மார்ட்போன் ஆனது GCF சான்றிதழ் மற்றும் UAE இணையதளங்களில் SM-A366B/DS என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டது. எனவே விரைவில் இந்த போன் ஐக்கிய அரபு அமீரகத்தில் - யுஏஇ (United Arab Emirates - UAE) அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதுவும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display)உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் ஏற்கனவே கசிந்த இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

உலகமே வெயிட்டிங்.. வருகிறது புதிய சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5g Specifications): 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ36 போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 chipset) உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே(flat AMOLED Display)உடன் அறிமுகம் இந்த சாம்சங் போன் செய்யப்படும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers),5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் 5000mAh பேட்டரி உடன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A36 5G 5G Spotted on UAE Website: May Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X