Home
Mobile

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல OIS கேமரா.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்தியாவில் மார்ச் 11ஆம் தேதி களமிறங்க இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ35 போனின் விலை விவரங்கள் கசிந்து அந்த போனுக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அல்ட்ரா பிரீமியம் டிசைனில், எக்ஸினோஸ் சிப்செட், 1டிபி மெமரி, ஆண்ட்ராய்டு 14 போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்த போனானது, ஏற்கனவே ஜெர்மனியில் விற்பனைக்கு வந்து, மிகப்பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது. இந்த வேரியண்ட்களின் விலை மற்றும் அம்சங்களே இப்போது மார்கெட்டில் கசிந்து இருக்கின்றன. இதே அம்சங்கள் மற்றும் விலையிலேயே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆகவே, அவற்றை பார்ப்போம்.

பட்ஜெட்ல OIS கேமரா.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி ஏ35 விலை (Samsung Galaxy A35 Price): இந்த ஏ35 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,180ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.40,490ஆக இருக்கிறது. ஐஸ் ப்ளூ (Ice Blue), நேவி ப்ளூ (Navy Blue) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது.

அதேபோல லைலாக் (Lilac) மற்றும் லெமன் (Lemon) ஆகிய கலர்களிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் டிசைனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறு. இந்த போனின் சிப்செட், பேட்டரி மற்றும் கேமரா அம்சங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

சாம்சங் கேலக்ஸி ஏ35 அம்சங்கள் (Samsung Galaxy A35 Specifications): இந்த சாம்சங்கில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் மற்றும் மாலி ஜி68 எம்பி5 ஜிபியு (Mali G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 6 (Samsung One UI 6) கிராபிக்ஸ் வருகிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு இன்பினிட்டி-ஓ எச்டிஆர் டிஸ்பிளே (Infinity-O HDR Display) மாடலாகும். இந்தியாவிலும் இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வர இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (micro SD Card) சப்போர்ட் வருகிறது. 50 எம்பி ரியர் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் (ultra-wide angle) கேமரா + 5 எம்பி மேக்ரோ சென்சார் (macro sensor) வருகிறது.

ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் மற்றும் 13 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் ஏ35 போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) சப்போர்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A35 With OIS Camera, 8GB RAM to Launch in India on March 11 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X