மார்க்கெட்டே மிரள போகுது.. 50எம்பி கேமரா.. sAMOLED டிஸ்பிளே.. பட்ஜெட்ல சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 கீக்பென்ச் பட்டியலில் (Geekbench Listing) காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
கீக்பென்ச் தளத்தில் SM-A356U என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ35 அம்சங்கள்: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் sAMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
சாம்சங் நிறுவனத்திற்குச் சொந்தமான எக்ஸ்நோஸ் 1380 (Exynos 1380) சிப்செட் வசதியுடன் இந்த கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு (ultrawide) கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) போன்ற அசத்தலான வசதிகளுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி (5,000mAh battery) உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging support) வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








