Home
Mobile

ஃபயரு டிஸ்கவுண்ட்.. ரூ.5000 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்ல சாம்சங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிரீமியம் சாம்சங் போன் அடிமட்ட விலைக்கு கிடைத்தால், ஆர்டர் வெளுத்து கட்டாமல் இருக்குமா? எந்தவொரு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இல்லாமலேயே ரூ.5000 உடனடி விலை குறைப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், இன்பினிட்டி-ஓ எச்டிஆருடன் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 25W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) போன் கிடைக்கிறது.

பிரீமியம் லுக் கொடுக்கும் சாம்சங் போன் பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்டால், இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி பக்காவான ஆப்ஷனாகும். ஆனால், லுக்கை போலவே பீச்சர்களிலும் பிரீமியமாக கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், டால்பி அட்மோஸ் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பீச்சர்களையும் பேக் செய்துள்ளது. முதலில் பீச்சர்களை பார்ப்போம்.

ஃபயரு டிஸ்கவுண்ட்.. ரூ.5000 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்ல சாம்சங்!

சாம்சங் கேலக்ஸி ஏ35 அம்சங்கள் (Samsung Galaxy A35 Specifications): இந்த கேலக்ஸி போனில் சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் வருகிறது. மேலும், மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொண்ட மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டை பேக் செய்துள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Syatem) வருகிறது. மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 10X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 போனில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூனுடன் 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. பட்டையை கிளப்பும் கலர் அக்கியூரசி அவுட்புட் கொடுக்க 16 மில்லியன் கலர் டெப்த் பேக் செய்துள்ளது.

ஃபயரு டிஸ்கவுண்ட்.. ரூ.5000 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்ல சாம்சங்!

25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) வருகிறது. மேலும், IP67 டஸ்ட்& வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த கேலக்ஸி மாடலில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) பேக் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ35 பிளிப்கார்ட் (Samsung Galaxy A35 Flipkart): இந்திய மார்கெட்டில் வெளியானபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999ஆக இருந்தது. இந்த பட்ஜெட்டுக்கு பக்கா பீச்சர்களை கொடுத்ததால் விற்பனை சக்கைப்போடு போட்டது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.5000 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

இந்த டிஸ்கவுண்ட் பெறுவதற்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தேவையில்லை. நேரடியாக விலையில் இருந்து குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு மட்டுமல்லாமல், ரூ.10,000-க்கும் மேல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. சாம்சங் மாடல்தான் வேண்டும். அதிலும் மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் வேண்டும் என்றால், இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 பக்காவாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A35 With 8GB RAM Sale Under Rs 26000 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X