Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.6500 விலை குறைப்பு.. பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த SAMSUNG மாடல்?

பொசுக்குனு ரூ.6500 விலை குறைப்பில் மிட்-பிரீமியம் சாம்சங் போன் ஆர்டருக்கு கிடைத்தால், விற்பனை பிச்சிக்காமல் இருக்குமா? அப்படியான டிஸ்கவுண்ட்டில் சாம்சங் ஏ35 (Samsung Galaxy A35) போனானது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கிறது. வீடியோ டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, எச்டிஆர் அமோலெட் டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் ஆடியோ, 5000mAh பேட்டரி போன்ற பக்கா பீச்சர்களுடன் பிரீமியம் பாடியில் இந்த சாம்சங் ஏ35 மாடல் கிடைக்கிறது. இந்த போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை பார்ப்போம்.

இந்த சாம்சங் ஏ35 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாகின. 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், ரூ.6,500 விலை குறைப்பில் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. அதாவது, பேங்க் டிஸ்கவுண்ட் இல்லாமலேயே ரூ.29,499 விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.6500 விலை குறைப்பு.. பட்ஜெட் OIS கேமரா!

இந்த விலையில் ரூ.5000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். ஆகவே, ரூ.24,999 பட்ஜெட்டில் இப்போது வாங்கி கொள்ள கிடைக்கிறது. அதே நேரத்தில் ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ரூ.9600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ35 அம்சங்கள் (Samsung Galaxy A35 Specifications): இந்த கேலக்ஸி போனில் நான்கு ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) கிடைக்கிறது. 5 வருடத்துக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கிறது. எக்சினோஸ் 1380 ஆக்டா-கோர் (Exynos 1380 Octa-Core) சிப்செட் கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியானதால், வீடியோ டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Video Digital Image Stabilization) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 4K வீடியோ ஷூட்டிங் சப்போர்ட் வருகிறது.

மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமராவை கொடுக்கிறது. 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த மாடலில் 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ எச்டிஆர் (Infinity-O HDR) டிஸ்பிளே வருகிறது. இதுவொகு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கும் டிஸ்பிளே மாடலாகும்.

அமோலெட் (AMOLED) பேனல் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 போனில் ஜிபியு மாலி ஜி68 (GPU Mali G68) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) போர்ட் கொண்டிருக்கிறது.

25W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. இதற்கு 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், இந்த சாம்சங் கேலக்ஸி ஏ3 போனில் IP67 டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வருகிறது. மிட்-பிரீமியம் சாம்சங் போனை பட்ஜெட்டில் வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு இது பெஸ்ட் ஆப்ஷனாகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A35 With 50MP Camera Gets 13 Percent Discount on Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X