Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. புதிய சாம்சங் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் கூகுள் பிளே கன்சோல் தளத்தில் காணப்பட்டுள்ளது. அதாவது அந்த தளத்தில் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போன். மெலிதான பெசல்களுடன் கூடிய பிளாட் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதிர போகுது மார்க்கெட்.. 50எம்பி கேமரா..  புதிய சாம்சங் 5ஜி போன் ரெடி!

சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A35 Specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் sAMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

எக்ஸ்நோஸ் 1380(Exynos 1380) சிப்செட் வசதியுடன் இந்த கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு (ultrawide) கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன்அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அதேபோல எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன். பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) போன்ற அசத்தலான வசதிகளுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர போகுது மார்க்கெட்.. 50எம்பி கேமரா..  புதிய சாம்சங் 5ஜி போன் ரெடி!

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி (5,000mAh battery) உடன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging support) வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

குறிப்பாக 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ35 போன் அறிமுகமாகும் என் கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் வரும் வாரங்களில் இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A35 spotted on Google Play console: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X