Home
Mobile

விட்ராதீங்க சார்.. பட்ஜெட்டுக்கு வந்த சாம்சங்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா வெளியாக இருப்பாதல், பழைய மாடல்களின் விலை அதிரடியாக குறைந்து இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) இப்போது பட்ஜெட்டில் கிடைக்கிறது. எந்தவொரு பேங்க் கார்டுகளும் இல்லாமலேயே இப்போது கம்மி பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விலை குறைப்பு விவரங்களுக்கு செல்வோம்.

இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவவனத்தின் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) கிடைக்கிறது. மேலும், மிட்-பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

விட்ராதீங்க சார்! பட்ஜெட்டுக்கு வந்த சாம்சங்.. AMOLED டிஸ்பிளே.. போன்?

இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த வேரியண்ட்களில் மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, கஸ்டமர்கள் 1 டிபிக்கான எஸ்டி கார்டை கூடுதல் ஸ்டோரேஜ்க்கு பயன்படுத்தி கொள்ளலாம். டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கிடைக்கிறது.

டிஸ்பிளே பீச்சர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பக்காவான அவுட்புட் கொடுக்கும்படி 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் அவுட்புட் கிடைக்கிறது. கலர் அக்கியூரசிக்காக 16 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் போன்களில் எப்போதும் கிடைக்கும் டிரிபிள் ரியர் கேமரா இந்த போனிலும் கிடைக்கிறது. ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வீடியோ சப்போர்ட் கொடுக்கும் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமராவை பெற்று கொள்ளலாம். இதில் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது.

இந்த கேமரா மூலம் 10X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். அதேபோல 4K அவுட்புட்டில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போனில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) பேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் மற்றும் டைப்-சி ஆடியோ (Type C Audio) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போனில் IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் பெற்று கொள்ளலாம். பேட்டரியில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே கிடைக்கிறது. இந்த சார்ஜிங்குக்கு ஏற்றபடி 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி அமேசான் விற்பனை (Samsung Galaxy A35 5G Amazon Sale): இந்திய மார்கெட்டில் வெளியான போது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆக இருந்தது. ஆனால், இப்போது நேரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டு, ரூ.25,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A35 5G With 8GB RAM Sale Under Rs 25000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X