அசூர விற்பனை.. ரூ.25000 பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 25W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் ஆர்டருக்கு மேல் ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ எச்டிஆர் டிஸ்பிளே, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? முழு பீச்சர்கள் எப்படி? எங்கு ஆர்டர் செய்ய வேண்டும்? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A35 5G Specifications): சாம்சங் ஏ சீரிஸ் மாடல்களில் பக்காவான கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்களை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போன் கொண்டுள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus), 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stablization) டெக்னாலஜி கிடைக்கிறது. இதுபோக நைட்போட்டோகிராபிக்காக சென்சார் என்ஹான்ஸ்டு செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் போனில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ எச்டிஆர் (Super AMOLED Infinity-O HDR) டிஸ்பிளே உள்ளது.
இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. ரவுண்டெட் கார்னர்கள் (Rounded Corners) டிசைனில் ஃபுல் ரெக்டாங்கிள் (Rectangle) அவுட் கொண்டிருக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பக்கா கலர் அவுட்புட் கொடுக்க 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட் உள்ளது. இதுபோக 1 டிபிக்கான எஸ்டி கார்டு (SD Card) பயன்படுத்தி கொள்ளலாம். சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் மற்றும் மாலி ஜி68 எம்பி5 ஜிபியு (Mali G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் சாம்சங் போன்களில் வரும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. IP67 டஸ்ட்& வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In display Fingerprint Sensor) இருக்கிறது. அவ்சம் ஐஸ்ப்ளூ (Awesome Iceblue), அவ்சம் லைலாக் (Awesome Lilac) மற்றும் அவ்சம் நேவி (Awesome Navy) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது.
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.5000 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம். ஐசிஐசிஐ, எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல ஈஎம்ஐ மூலம் வாங்கினால், கூடுதலாக 5 சதவீதம் கேஷ் பேக் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








