திடீர்னு செம்ம டிமாண்ட் ஆகும் Samsung 5G போன்.. ரூ.5000 விலை குறைச்சா யாரு விடுவா.. அதான் ஆர்டர் அள்ளுது!
Samsung Galaxy A35 5G Discount: சாம்சங் நிறுவனத்தின் எஸ்-சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது பிரீமியம் பிரிவையும், எம்-சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது பட்ஜெட் பிரிவையும் ஆட்சி செய்கிறது என்றால்.. ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மிட்-ரேன்ஜ பிரிவை ஆட்சி செய்கிறது. ரூ.25,000 - ரூ.35,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை தேடும் எவருமே.. பல எண்ணிக்கையிலான சாம்சங் கேலக்ஸி ஏ-சீரீஸ் மாடல்களை கடந்து செல்ல நேரிடுகிறது. இதற்கிடையில் 2 சாம்சங் கேலக்ஸி ஏ-சீரீஸ் மாடல்கள் மீது திடீரென லிமிடெட் ப்ரீயட் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்கள்? சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ55 மற்றும் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன்கள் மீது வரையறுக்கப்பட்ட கால தள்ளுபடியை (Limited period discount) அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி - பேங்க் கேஷ்பேக்காகவோ அல்லது பழைய சாம்சங் ஸ்மார்ட்போனிலிருந்து அப்கிரேட் ஆகும் போது கிடைக்கும் அப்கிரேட் போனஸாகவோ அணுக கிடைக்கும்.

எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் மீது ரூ.6000 தள்ளுபடியும், சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் மீது ரூ.5000 தள்ளுபடியும் கிடைக்கும். அதாவது தள்ளுபடிக்கு பின்னர் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், இதே ரேம் + ஸ்டோரேஜுடன் வரும் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் ரூ.35,999 க்கும் வாங்க கிடைக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த தள்ளுபடி - முன்னணி வங்கிகளிடமிருந்து பேங்க் கேஷ்பேக்காக அல்லது அப்கிரேட் போனஸாகவோ பெறலாம். இதுதவிர்த்து 6 மாதங்கள் வரையிலான இஎம்ஐ (EMI) விருப்பமும் கூட அணுக கிடைக்கிறது. கேலக்ஸி ஏ55 மற்றும் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன்கள் மீதான இந்த சலுகை சாம்சங் நிறுவனத்தின் இணையதளம், ஆஃப்லைன் கடைகள் மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்கள் வழியாக அணுக கிடைக்கிறது.
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் ஆனது ஆஸம் லிலாக் (Awesome Lilac), ஆஸம் ஐஸ் ப்ளூ (Awesome Ice Blue) மற்றும் ஆஸம் நேவி (Awesome Navy) ஷேட்களில் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் ஆஸம் ஐஸ் ப்ளூ (Awesome Ice Blue) மற்றும் ஆஸம் நேவி (Awesome Navy) கலர்களில் வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ55 மற்றும் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: இரண்டுமே டூயல்-சிம் (நானோ) ஆதரவு உடன் வருகின்றன. மேலும் இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.6-இன்ச் FHD+ (1080 x 2408 பிக்சல்ஸ்) சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் ஆனது 4nm ப்ராசஸ் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட Exynos 1480 SoC-ஐ பேக் செய்கிறது. இது 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் ஆனது 5nm ப்ராசஸ் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட Exynos 1380 சிப்செட்டை பேக் செய்கிறது.
இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் ஆனது ஆட்டோஃபோகஸுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 2-மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் ஆனது ஆட்டோஃபோகஸுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 5-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 13 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது!


Click it and Unblock the Notifications








