தூள் கிளப்பும் பிளிப்கார்ட்.. IP67 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart GOAT Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (SAMSUNG Galaxy A35 5G) ஸ்மார்ட்போன் மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் பெறமுடியும். எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A35 5G Specifications): தரமான ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அதேபோல் 6.6 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவை வழங்குகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது.
குறிப்பாக சாம்சங் ஒன் யுஐ 6 (Samsung One UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இந்த சாம்சங் மாடலில் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இதுதவிர 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் மற்றும் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது.


Click it and Unblock the Notifications








