Home
Mobile

கூவி, கூவி விற்கும் அமேசான்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்

தற்போது அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போனுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,448 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

கூவி, கூவி விற்கும் அமேசான்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A35 5G Specifications): சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. இந்த போன் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவை வழங்குகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது.

குறிப்பாக சாம்சங் ஒன் யுஐ 6 (Samsung One UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இந்த சாம்சங் மாடலில் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

அதேபோல் 6.6 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தரமான ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அதுவும் IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் மற்றும் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது.

Best Mobiles in India

English summary
;Samsung Galaxy A35 5G is available at a 40 percent discount on Amazon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X