பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. ஆஃபரில் Samsung போன்.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி போனுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A35 5G Specifications): ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அதுவும் 6.6 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக சாம்சங் ஒன் யுஐ 6 (Samsung One UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இந்த சாம்சங் மாடலில் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போன் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவை வழங்குகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் மற்றும் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது.


Click it and Unblock the Notifications








