அடிதூள்.. சத்தமில்லாமல் 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கிய சாம்சங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் வழங்கத் தொடங்கி உள்ளது. தற்போது சில போன்களுக்கு மட்டுமே இந்த புதிய அப்டேட் கிடைக்கிறது. கூடிய விரைவில் அனைத்து சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தற்போது மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போனுக்கு One UI 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைக்கத் தொடங்கி உள்ளது. குரோஷியா, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, போலந்து, போர்ச்சுகல், செர்பியா, ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து, செக்கியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கேலக்ஸி ஏ34 போனுக்கு இந்த அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

ஆனால் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ34 வைத்திருக்கும் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் எப்போது கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் இந்தியப் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவிக் பேனல், ஆப் இன்டர்பேஸ், போட்டோ Remaster, Object Eraser, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 அப்டேட் ஆனது சாம்சங் பயனர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். மேலும் இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ34 அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்Super AMOLED Infinity-Uடிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
மீடியாடெக் Dimensity 1080 6nm பிராசஸர் உடன் Mali-G68 MC4 GPU ஆதரவு சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போனில் உள்ளது.எனவே இந்த போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ34 போன் 48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ34 போன்.


Click it and Unblock the Notifications