Home
Mobile

ஆர்டர் அறக்க பறக்குது.. முழுசா ரூ.5000 கம்மி.. OIS கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. சாம்சங் போனாச்சே!

பிளிப்கார்ட் (Flipkart) தளமே அதிரும்படி சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, டைமன்சிட்டி 1080 சிப்செட், 5000mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ34 (Samsung Galaxy A34) போனுக்கு டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ34 அம்சங்கள் (Samsung Galaxy A34 Specifications): இந்த சாம்சங் போன் 6.6 இன்ச் (1080×2340 பிக்சல்கள்) ஃபுஎல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-யு டிஸ்பிளே (Super AMOLED Infinity-U Display) மாடலாகும்.

முழுசா ரூ.5000 கட்.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. சாம்சங் போனாச்சே!

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 1000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 5.1 (Samsung One UI 5.1 OS) ஓஎஸ் வருகிறது.

அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 1080 6nm) சிப்செட் மற்றும் மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 போனில் 2 வேரியண்ட் கிடைக்கிறது.

ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதோடு 1 டிபிக்கான மெமரி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் வருகிறது.

இந்த சாம்சங் போன் டிரிபிள் ரியர் ஓஐஎஸ் (OIS) கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 48 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 5 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெயின் கேமராவோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது.

அதேபோல 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) சப்போர்ட் இருக்கிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) போர்ட் வருகிறது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டிருக்கிறது. இந்த ஏ34 மாடலில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியோடு சேர்த்து 199 கிராம் எடைக் கொண்டுள்ளது.

இந்த போனில் 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்ஃஎப்சி போன்ற (NFC) கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போன் அவ்சம் லைம், அவ்சம் கிராபைட், அவ்சம் வயலெட் மற்றும் அவ்சம் சில்வர் ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.30,999ஆக நிர்யணம் செய்யப்பட்டது. இதையடுத்து அதிரடியாக விலை குறைக்கப்பட்டு ரூ.27,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலையிலும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலை வெறும் ரூ.25,999க்கு வாங்கிக்கொள்ள முடியும். பட்ஜெட் விலையில் பிரீமியம் கேமரா, பக்காவான பேட்டரி, நல்ல சிப்செட் கொண்ட போன் வேண்டுமானால், இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A34 Sale On Flipkart With Price Cut And Bank Offer Check Specifications Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X