Home
Mobile

கேமிங் சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Samsung 5G போன்.! நம்பி வாங்கலாம்.!

சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ34 5ஜி எனும் புதிய ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியாடெக் Dimensity 1080 சிப்செட்

மீடியாடெக் Dimensity 1080 சிப்செட்

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 பிராசஸர் மற்றும் Mali G71 MP2 GPU ஆதரவுடன் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13

ஆண்ட்ராய்டு 13

அதாவது Dimensity 1080 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகத்தைக் கொடுக்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity U டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். பெரிய டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 13எம்பி கேமரா

13எம்பி கேமரா

இணையத்தில் கசிந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற குவாட்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் 48எம்பி கேமராவுக்கு பதிலாக 64எம்பி கேமரா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

 பட்ஜெட் விலை..

பட்ஜெட் விலை..

அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போன். பின்பு கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சாம்சங் போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A34 5G with Dimensity 1080 chipset will be launched soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X