Home
Mobile

6ஜிபி ரேம் உடன் குறைந்த விலையில் களமிறங்கும் அசத்தலான Samsung 5ஜி போன்.!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் கேலக்ஸி ஏ34 5ஜி எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த புதிய போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்று மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அதாவது 8ஜிபி ரேம் மறறும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிப ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் 6ஜி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ34 5ஜி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

6ஜிபி ரேம் உடன் குறைந்த விலையில் களமிறங்கும் அசத்தலான Samsung 5ஜி போன்

அதாவது வரும் வாரங்களில் 6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வேரியண்ட் சற்று குறைவான விலையில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராஃபைட், சில்வர் மற்றும் Lime நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED Infinity-U டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6ஜிபி ரேம் உடன் குறைந்த விலையில் களமிறங்கும் அசத்தலான Samsung 5ஜி போன்

சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1080 6nm பிராசஸர் உடன் Mali-G68 MC4 GPU ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் வசதி மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக இந்த சாம்சங் 5ஜி போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.

48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6ஜிபி ரேம் உடன் குறைந்த விலையில் களமிறங்கும் அசத்தலான Samsung 5ஜி போன்

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 போன். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை இந்த அசத்தலான சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்.குறிப்பாக 5ஜி வசதி, தரமான சிப்செட், நீண்ட நேரம் பேக்கப் வழங்கும் பேட்டரி, அசத்தலான கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A34 5G with 6GB RAM will be launched in India at low price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X