அடேங்கப்பா.. மீண்டும் தரமான ஒரு 5G போனை இந்தியாவில் இறக்கிவிடும் Samsung: டீசர் வெளியானது..!
சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த கேலக்ஸி எம்34 5ஜி போனின் டீசர் வெளியானது. குறிப்பாக இந்த புதிய போன் அமேசான் தளம் மூலம விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி போன் ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இணையதளத்தில் கசிந்த இந்த கேலக்ஸி எம்34 5ஜி போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 பிராசஸர் மற்றும் Mali G71 MP2 GPU ஆதரவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity U டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற குவாட்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Samsung Galaxy A34 5Gஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் 199 கிராம் எடையுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
.


Click it and Unblock the Notifications