Home
Mobile

பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்த சாம்சங் நிறுவனம். அதன்படி இந்நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் தெரியவந்துள்ளது. அதாவது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போனின் மாடல் எண் SM-A346M என்று Bureau of Indian Standards (BIS) தளத்தில் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் இந்த போனின் அம்சங்களும் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity U டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த
போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி Dimensity 1080 சிப்செட் ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த Dimensity 1080 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகத்தைக் கொடுக்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

13எம்பி கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற குவாட்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த புதிய போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகமாகும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய சாம்சங் போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A34 5G smartphone with 25W fast charging support will be launched soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X