மீண்டும் ஒரு அட்டகாச 5G போனை இந்தியாவில் இறக்கிவிடும் Samsung.! பட்ஜெட் விலை.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து 5ஜி போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. அதாவது தற்போது இந்தியாவில் 4ஜி போன்களை விட 5ஜி போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. எனவே இதை மனதில் வைத்து 5ஜி போன்களை அதிகமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி
அதன்படி விரைவில் இந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி எனும் ஸ்மாரட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த கேலக்ஸி எம்34 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

எக்ஸிநோஸ் 1280 பிராசஸர்
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 பிராசஸர் மற்றும் Mali G71 MP2 GPU ஆதரவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற குவாட்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Infinity U டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Infinity U டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

பட்ஜெட் விலை..
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போன். பின்பு இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications