"ஓஹோ"னு விற்பனையான Samsung போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு: இப்போ பட்ஜெட் விலை பாஸ்!

|

Samsung Galaxy A32 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சற்று முந்தைய மாடல் தான் என்றாலும், அறிமுகமான சமயத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன் இது என்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயம்.

இந்த ஸ்மார்ட்போனுக்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சாம்சங் நிறுவனம் இந்த மாடலின் விலை குறைத்து அறிவித்துள்ளது.

4ஜி ஆதரவு கொண்ட Samsung Galaxy A32

4ஜி ஆதரவு கொண்ட Samsung Galaxy A32

Samsung Galaxy A32 ஸ்மார்ட்போனானது வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகிறது. சாம்சங் சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் வாரிசாக Galaxy A32 5Gஐ அறிமுகம் செய்தது.

Samsung Galaxy A32 ஆனது 4ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறது. நிறுவனம் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்து அறிவித்துள்ளது. Samsung Galaxy A32 மாடலில் இரண்டு வேரியண்ட்கள் இடம்பெற்றுள்ளது.

ஏ32 மாடலில் இரண்டு வேரியண்ட்கள்

ஏ32 மாடலில் இரண்டு வேரியண்ட்கள்

Samsung நிறுவனம் Samsung Galaxy A32 மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.21,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது.

தொடர்ந்து கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த மாடலின் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த இரண்டு வேரியண்டும் விலைக்குறைப்பைப் பெற்றிருக்கிறது.

Samsung Galaxy A32 விலை

Samsung Galaxy A32 விலை

Samsung Galaxy A32 விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், ரூ.21,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.18,500 என கிடைக்கிறது.

அதேபோல் இந்த மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை விற்பனையாளர்களின் அடிப்படையில் ரூ.18,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.23,499 என அறிமுகம் செய்யப்பட்டது.

Samsung Galaxy A32 டிஸ்ப்ளே

Samsung Galaxy A32 டிஸ்ப்ளே

Samsung Galaxy A32 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி யூ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. இதில் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஆதரவு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவு

சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 உடனான ஒன் யுஐ 3 ஓஎஸ் ஆதரவு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

64 எம்பி பிரதான கேமரா

64 எம்பி பிரதான கேமரா

Samsung Galaxy A32 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை இதில் 64 எம்பி பிரதான கேமரா உட்பட குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

64 எம்பி பிரதான கேமரா உட்பட 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மிக நியாயமான விலை

மிக நியாயமான விலை

64 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 6 ஜிபி ரேம் 8 ஜிபி ரேம், ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் என அனைத்து ஆதரவுகளும் சிறப்பானதாக இருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை என்பது மிக நியாயமாக இருக்கிறது.

சிறந்த தேர்வு

இந்த ஸ்மார்ட்போன் ரிவ்யூக்களிலும் சிறந்த மதிப்பெண்களை பெற்றிருக்கிறது. எனவே புதிய ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டால் தாராளமாக இதை வாங்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A32 Smartphone Gets Massive price Cut in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X