அட்டகாசமான புதிய Samsung Galaxy A32 4G விலை இது தானா? பட்ஜெட் விலையில் அடுத்த பெஸ்ட் போன் ரெடி..

|

சாம்சங் நிறுவனம் வரும் மார்ச் 5 ஆம் தேதி தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 32 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இப்போது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி சாதனத்தின் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி ஸ்மார்ட்போன்

டிவிட்டரில் டிப்ஸ்டர் இஷான் அகர்வால் அறிவிப்பின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டி மாடல் இந்தியாவில் ரூ. 21,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவரது ட்வீட் வரும் மார்ச் 5 ஆம் தேதி சாம்சங் நிறுவனம் அதன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

குவாட் கேமரா அமைப்புடன் பெரிய பேட்டரி

குவாட் கேமரா அமைப்புடன் பெரிய பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன் 64 எம்பி குவாட் கேமரா அமைப்புடன், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் மென்மையான ஸ்க்ரோலிங் செய்வதற்கு ஏற்ற அமோலேட் 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. சமீபத்தில் வெளியான கேலக்ஸி ஏ 12 மாடலுக்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் கேலக்ஸி A சீரிஸில் வெளியாகும் இரண்டாவது போன் இதுவாகும்.

மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!

ரஷ்யாவில் இது தான் விலையா?

ரஷ்யாவில் இது தான் விலையா?

சமீபத்தில் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி மாடலின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 19,575 ஆகும். அதேபோல், இதன் 128 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பின்படி ரூ. 21,535 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி ஸ்மார்ட்போன் ஆஸம் வயலட், ஆஸம் பிளாக், ஆஸம் வைட், ஆஸம் ப்ளூ வண்ண விருப்பங்களில் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி சிறப்பம்சம்

 • 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-யு டிஸ்பிளே
 • 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
 • இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் ரீடர்
 • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்
 • ஆண்ட்ராய்டு 11 உடன் ஒன் யுஐ 3 இயங்குதளம்

1TB ஸ்டோரேஜ் உடன் தயாராகிறதா iPhone 13 சாதனம்? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?1TB ஸ்டோரேஜ் உடன் தயாராகிறதா iPhone 13 சாதனம்? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

 • 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
 • 64 ஜிபி / 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ்
 • மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ்
 • குவாட் கேமரா அமைப்பு
 • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
 • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
பேட்டரி

பேட்டரி

 • 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
 • 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
 • 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • 5000 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A32 Price Leaked Before of Launch On March 5 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X