மார்ச் 5 ஆம் தேதி புதிய சாம்சங் கேலக்ஸி ஏ 32 இந்தியாவில் அறிமுகம்.. விலை இது தானா?

|

சாம்சங் நிறுவனம் வரும் மார்ச் 5 ஆம் தேதி தனது சாம்சங் கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இந்த சாதனம் அதே நாளில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. சாம்சங் இந்தியாவின் இணையதளத்தில் ஒரு மைக்ரோசைட், குறிப்பிட்ட தேதியில் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்பதைக் காட்டுகிறது. மேலும் சாதனத்தின் சில முக்கிய விவரக்குறிப்புகளையும் மைக்ரோ சைட் வெளிப்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன் மாடலின் 4 ஜி மாறுபாடு மட்டுமே இந்த நேரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவின் மைக்ரோ சைட் சாம்சங் 5G பற்றிய டஹ்கவலை வலைப்பக்கத்தில் எங்கும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சாதனத்தின் 5 ஜி மாறுபாடு ஏற்கனவே ரஷ்யா மற்றும் இங்கிலாந்தில் கிடைக்கிறது என்பது கவனத்திற்கு.

ஐரோப்பிய சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி

இந்த சாதனம் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி ஸ்மார்ட்போனில் மிகக் குறைவான மாற்றங்கள் மட்டுமே இந்திய சந்தைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன. ஆதரவு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மாதிரி எண் - 'SM-A326B / DS' என்பது சாம்சங் கேலக்ஸி A32 5G இன் மாதிரி எண் என்று சாம்மொபைலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் to சோசியல் மீடியா: அரசின் அறிவிப்பால் இந்தியர்களுக்கு ஏற்படும் அடுத்த 'பிரைவசி' சிக்கல்..வாட்ஸ்அப் to சோசியல் மீடியா: அரசின் அறிவிப்பால் இந்தியர்களுக்கு ஏற்படும் அடுத்த 'பிரைவசி' சிக்கல்..

டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆக்டா கோர் 5 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும் என்று தெரிகிறது. சாதனம் 15W பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

கைரேகை சென்சார்

கூடுதல் பாதுகாப்பிற்காக சாதனத்தின் பக்கத்தில் ஒரு கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் இது சரவுண்ட்-சவுண்ட் அனுபவத்திற்காக டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் வரக்கூடும். சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி, பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்புடன் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

செல்ஃபிக்காக மற்றும் வீடியோ அழைப்புக்காக, முன்பக்கத்தில் 13MP சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் 64 ஜிபி அடிப்படை வேரியண்ட் மாடல் தோராயமாக ரூ.25,000-க்கு அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்டின் விலை தோராயமாக ரூ.27,000 ஆக இருக்கலாம். ஐரோப்பா சந்தையில் ஆஸம் ப்ளூ, ஆஸம் வைட், ஆஸம் வயலட் மற்றும் ஆஸம் பிளாக் வண்ணங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy A32 India Launch Confirmed on March 5 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X