Home
Mobile

48எம்பி கேமராவுடன் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி ஏ32 5ஜி ஆனது சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அசத்தலான கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

48எம்பி கேமராவுடன் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.24,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஎஃப்டி இன்பினிட்டி-வி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் எஸ்ஓசி செயலி Dimensity 720 மூலம் இயக்கப்படும். இது 8ஜிபி ரேம் வரை வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

48எம்பி கேமராவுடன் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. அதோடு இதன் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி இணைப்பு ஆதரவுகளில் வைஃபை, ப்ளுடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆதரவு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை
சென்சார் உள்ளது.

அதேபோல் இந்த சாதனத்தின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி Dolbyஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

48எம்பி கேமராவுடன் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

வெளிவந்த தகவலின்படி கருப்பு, நீலம், வெள்ளை, ஊதா நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும், பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான வெளிவந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A32 5G with 48MP camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X