சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் ஆனது தாய்லாந்தில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. மற்ற நாடுகளில் உள்ள் சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக புதிய அப்டேட் ஃபார்ம்வேர் பதிப்பு A326BXXU4BVC8ஐக் கொண்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 மேம்படுத்தலுடன், பயனர்கள் மார்ச் 2022க்கான சமீபத்திய பாதுகாப்பு பேட்சையும் பெறுவார்கள். மேலும் இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு தனி அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம்.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 11 உடன் வெளியடப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இப்போது இந்த கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஎஃப்டி இன்பினிட்டி-வி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கார்னிங் கொரில்லாகிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் எஸ்ஓசி செயலி Dimensity 720மூலம் இயக்கப்படும். இது 8ஜிபி ரேம் வரை வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. அதோடு இதன் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி இணைப்பு ஆதரவுகளில் வைஃபை, ப்ளுடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆதரவு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை
சென்சார் உள்ளது.

அதேபோல் இந்த சாதனத்தின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி Dolbyஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். கருப்பு, நீலம், வெள்ளை, ஊதா நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications