Samsung Galaxy A32 கேஸ் ரெண்டெர் சொல்லும் தகவல் இதுதான்.. ஆன்லைனில் வெளியானது டிசைன்..

|

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது அடுத்த ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி ஏ 32 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய போன் என்ன டிசைனில் வெளியாகும் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது, ஆனால், இப்போது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போனின் கேஸ் ரெண்டர்கள் ஆன்லைனில் வெளிவந்து, நமக்கு இருந்த சந்தேகத்தைத் தீர்த்துவைத்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போன்

டிப்ஸ்டர் சுதான்ஷு பகிர்ந்த ரெண்டர்களின் படி, சாம்சங் கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்பு உடன் வெளிவரும் என்று தெரிகிறது. கேமரா அமைப்பிற்கு அருகில் இரண்டு எல்.ஈ.டி ஃபிளாஷ் அமைப்பிற்கான இடமும் வழங்கப்பட்டுள்ளது. 3.5 ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் கீழே ஒரு ஸ்பீக்கர் கிரில் மற்றும் மேல் நிலையில் ஒரு மைக் அமைப்பைக் கொண்டுள்ளது.

போனின் கேஸ் வடிவமைப்பு

போனின் கேஸ் வடிவமைப்பு

மேலும், சாம்சங் கேலக்ஸி A32 5ஜி ஸ்மார்ட்போன் இன்ஃபினிட்டி-யு டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பது தெரிகிறது. சிம் கார்டு ஸ்லாட் இடது பக்கத்திலும், வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் கைரேகை சென்சார் கொண்ட பவர் சுவிட்ச் ஸ்மார்ட்போன் சாதனத்தின் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை போனின் கேஸ் வடிவமைப்பு தெளிவாக காட்டுகிறது.

Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..

வாட்டர் டிராப் நாட்ச்

வாட்டர் டிராப் நாட்ச்

துரதிர்ஷ்டவசமாக, சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி ஸ்மார்ட்போனின் எந்த விவரங்களையும் இந்த அறிக்கை வெளியிடவில்லை. முந்தைய கசிவுகளின் படி, ஸ்மார்ட்போனில் ஒரு அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் ஒரு 48 எம்பி பிரைமரி கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவில் செல்பி கேமரா இடம்பெறும்.

சாம்சங் கேலக்ஸி ஏ 12 டிசைன்

சாம்சங் கேலக்ஸி ஏ 12 டிசைன்

இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய வேறு எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. இதன் விலை மற்றும் இதர சிறப்பம்சங்கள் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இதேபோல், சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போனின் கேஸ் டிசைனும் ஆன்லைனில் வெளியாகியது.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy A32 5G case render reveals triple rear camera design : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X