Home
Mobile

64எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் ஜெர்மனியில் சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது புதிய கேலக்ஸி
ஏ32 4ஜி சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி சாதனம் ஆனது விரைவில் இந்தியா உட்பட மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த சாதனத்தின் விலைப் புள்ளிகளைப் பார்ப்போம். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ32 4ஜி மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.19,990-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ32 4ஜி மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.21,535-ஆக உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், வெள்ளை, வயலட், போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் சூப்பர் AMOLED Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90Hz refresh rate, 800nits பிரைட்நஸ் வசதி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன்

இந்த கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 64எம்பி பிரைமரி சென்சார்

64எம்பி பிரைமரி சென்சார்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறுஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 மீடியாடெக் ஹீலியோ ஜி80

மீடியாடெக் ஹீலியோ ஜி80

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 ஆதரவு உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் எடை 184 கிராம் என்பது
குறிப்பிடத்தக்கது.

வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-

புளூடூத் 5, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A32 4G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X